தகவல்களை அணுகுவதற்கான நடைமுறைகள்

சட்டம் - 2016 ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் 

உத்தரவுகள் - 2017 பெப்ரவரி 03  ஆம் திகதி வௌியான இல. 2004/66 உடைய அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரம் 

மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் கீழ் கிரியெல்ல பிரதேச செயலகம் சார்ந்த  தகவல்களை பெறுவதற்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள  தகவல் உத்தியோகத்தரிடம் RTI - 01 என்ற விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

தகவல்களை பெறுவதற்கு விண்ணப்பித்தல்.

  1. தகவல்களை பெற எழுத்துமூல RTI -01 விண்ணப்பம் ,கடிதம் அல்லது வாய்மொழி கோரிக்கை ஒன்றினை தகவல் உத்தியோகத்தரிடம் முன்வைத்து அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதிற்கு சான்றாக அவரிடமிருந்து கடிதமொன்றினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.   
  2. உங்கள் கோரிக்கையின்படி தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி மிக விரைவில் அல்லது 14 நாட்களுக்குள் தெரியப்படுத்தப்படும்.
  3. கேட்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்க தீர்மானிக்கும் பட்சத்தில் ஆணையகத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிக்க தொகையினை செலுத்தும்படி தகவல் வழங்கப்படும். தகவல்களை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமாயின் அதனடிப்படையிலும் அல்லது கட்டணம் செலுத்த தேவைப்படாவிடின் எந்தவொரு அறவீடும் இல்லாது 14 தினங்களுக்குள் தகவல்கள் பெற்றுத்தரப்படும்.
  4. கட்டணம் செலுத்தப்பட்டப் பின் 14 தினங்களுக்குள் தகவல்களை வழங்க முடியாதிருப்பின், தகவல் உத்தியோகத்தரினால் அதற்கான காலவரையறை நீடிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களுக்குள் உங்களால் கோரப்பட்ட தகவல்கள் பெற்றுத் தரப்படும். 
  5. தகவல் பெற்றுத்தருமாறு கோரப்பட்டிருக்கும் விண்ணப்பமானது ஒருவரின் வாழ்க்கை மற்றும் தனியாள் சுதந்திரத்தை பற்றியதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலானது கோரிக்கை முன்வைக்கப்பட்ட 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கப்பெறும்.   
  6. உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள் திருப்திகரமற்றதாக காணப்படின் (கிழ் காணும் முறையில்), 14 தினங்களுக்குள்  கீழ் காணும் உத்தியோகத்தரிடம் மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதையும் தயவுசெய்து கவனத்திற்கொள்க. 
  • தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல்.
  • சட்டத்தின் 5 ஆம் பகுதியில் குறிப்பிட்டள்ளவாறு விலக்களிக்கப்பட்ட தகவல்களாக கருதும் பட்சத்தில் அத்தகவல்களை வழங்க மறுத்தல். 
  • சட்டத்தினால் வரையறுக்கப்பட்ட காலப்பகுதி போதியதாக காணப்படாமை.
  • முழுமையற்ற, பிழையான அல்லது முறையற்ற தகவல்களை வழங்குதல்.
  • மேலதிக அறவீடுகளை மேற்கொள்ளல்.
  • கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் தகவல்களை வழங்க தகவல் உத்தியோகத்தர் மறுப்புத் தெரிவித்தல்.
  • அத்தகவல்களை அக்குடிமகன் அணுகுவதை தடுக்கும் பொருட்டு அவை சிதைக்கப்பட்டதாக, அழிக்கப்பட்டதாக அல்லது தவறான இடத்திலுள்ளதாக நியாயமான காரணங்களை முன்வைத்தல். එ
 பெயர் குறிப்பிடப்பட்ட தகவல் உத்தியோகத்தர் தொடர்பான தகவல்கள்
Mr.BMBMABatugedra 01
பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர் 
பிரதேச செயலாளர் (பதில் கடமைப் புரிபவர்)
திரு. பீ.எம்.பீ.எம்.ஏ. படுகெதர
045 226 5128
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 
b dumy
தகவல் உத்தியோகத்தர்
உதவி பிரதேச செயலாளர்
திரு. பீ.டீ.எஸ். மதுஷங்க
045 226 5038
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

 RTI 01 - தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்

RTI 02 - கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக அறியத்தருதல்

        விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI 03 - தகவல் கோரிக்கை பதிவு ஆவணம்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI  RTI  04 -கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக அறியத்தருதல்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்  

RTI 05 - தகவல் கோரிக்கை நிராகரிக்கப்படுதல்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI 06 - தகவல்கள் பெற்றுத்தரும் காலத்தை அதிகரித்தல்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI 07 - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI 08 - தகவல் அறியும் கோரிக்கை மீதான மேன்முறையீடு பற்றிய அறிவித்தல்

        விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்  

RTI 09 - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் - மேன்முறையீட்டு ஆவணம்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

RTI 10 - பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தரிற்கு அனுப்ப வேண்டிய மேன்முறையீட்டுப் படிவம்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்    

RTI 11 - நிராகரிப்பு விபரங்கள் பற்றிய ஆவணம்

          விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்   

RTI 12 - பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் தகவல் உத்தியோகத்தர் பற்றிய தகவல் அறிக்கை

         விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

   

         

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top