எமது நோக்கு

புதிய திறமைகள் நிறைந்த நிர்வாக குழாத்துடன் பிரதேச ஆட்சியை பலப்படுத்தல்.
 

எமது கொள்கை

ரச கோட்பாடுகளுக்கமைய சேவைகளை வழங்கல், மூலதன பகிர்வுகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்புடனான திறமையான, நிலையான திட்டமிடலுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்ளை முன்னெடுப்பதன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.
 

நிறுவன அறிக்கை

1996.08.01 ஆம் திகதி முதல் இவ்வாட்சி ட்ப் பிரதேசம் குருவிட பிரதேச செயலகத்தின் கீழ்​​ இறப்பர் அபிருத்தி   திணைக்களத்தின் உத்தியோக பூர்வ கட்டிடத்தில் வரையறுக்கப்பட்ட நிர்வாக குழாத்துடன்   தற்காலிக பிரதேச செயலக  உப காரியாலயமாக செயற்பட்டு வந்தது. அதன் பின்பே பிரதான பாதையருகே காணப்பட்ட வாடகை கட்டிடத்திற்கு கொண்டுச்  செல்லப்பட்டது.

கச்சேரி முறையின் கீழ் மாவட்ட மட்டம் வரை பரவலாக்கப்பட்டிருந்த  பணிகளானது 1992 ஆம் ஆண்டு பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட நிர்வாக பரவலாக்கல் திட்டத்தினை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் பொருட்டு விசாலமான பிரதேச செயலக பிரிவுகளை மீண்டும் பகுதிகளாக பிரிப்பதாக எடுக்கப்பட்ட  தீர்மானமானது நடைமறைப்படுத்தப்பட்டதன் விளைவாக 1998.10.27 ஆம் திகதி குருவிட பிரதேச செயலகப் பிரிவின் ஒரு பகுதியாக கிரயெல்ல பிரதேச செயலகம் தாபிக்கப்பட்டது.

இதன் படி 1998.10.27 ஆம் திகதியிலிருந்து பல தரப்படட சிரமங்கள் , சவால்களுக்கு  மத்தியில் பெரும் அர்ப்பணிப்புடனும் மற்றும் உயர் அரச ஆதரவுடனும் பிரதேச மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான பரவலான தேவைகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவதே எமது இலக்காக காணப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பௌதிக மற்றும் பொருளாதார வளங்ளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்குதல் தவிர்ந்த பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளக் கூடிய ஏனைய அனைத்து சேவைளையும் திறம்பட செய்து முடிப்பதற்கு  நிர்வாக குழுவினரின் முயற்சிகள் உறுதுணையாக இருந்ததென்றால் மிகையாகாது.

புதிய கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் 1999.10.29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்  2001.06.01 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் சேவைப் பணிகள் ஆரம்பமானது.

அரசின் அபிவிருத்தி கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டு புதிய பட்டதாரிகளை பிரதேச செயலகங்களில் வேலைக்கமர்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிரயெல்ல பிரதேச செயலகமானது 2003 மே மாதம் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு  முகங்கொடுக்க நேரிட்டது. இவ்வனர்த்தத்தினால் 1200 குடும்பங்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டதுடன் 197 வீடுகள் முழுமையாக சேதமடைந்தும், 455 வீடுகள் பகுதியாக சேதமடைந்தும் காணப்பட்டன.

2003 மே மாதம் முகம் கொடுத்த பாரிய அனர்த்தம் ப் பெருக்காகும். அதில் வீடுகள் 197 முழுமையாக அழிந்து. வீடுகள் 455 உடைந்து 1200 குடும்பங்கள் அகதிகளாகவும். 2008 வருடத்தில் 04 வெள்ளப்பெருக்களை முறைப்படி திட்டமிட்ட அனர்த்த முகாமைத்துவத்துக்கு முகம் கொடுக்க முடிந்தது.

2006 வருடத்தில் மாகாணத்தில் சிறந்த பிரதேச செயலகம் என்ற விருந்தும் கிடைத்தது. அதேபோல் 2008 வருடத்தில் சிறப்பு விருந்தை பெறுவதற்காக திட்டங்களை வகுத்துள்ளது.

 

அணுகுமுறைகள்

கிரயெல்ல பிரதேச​ செயலகத்திற்கு பிரவேசிக்கும் பிரதான பாதை பாணதுறை – இரத்தினபுரி “ஏ-8” எனும் பாதையாகும். இப்பாதையில் பாணதுறையிலிருந்து 37 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள எல்லகாவ எனும் பிரிவிலிருந்து பிரதேச செயலாளர் பெரும்பகுதி ஆரம்பமாவதுடன்  63 கிலோ மீற்றர் தொலைவில் ஹொலிபிடிய பிரிவின் இடது மூலையில்  அமைந்துள்ள கஹங்கமை எனுமிடத்தில் நிறைவுபெறுகிறது. இப்பாதையில்  49 கிலோ மீற்றர் தொலைவில் பிரதேச செயலாளர் பெரும்பகுதியின் பிரதான நகரமான ​இடங்கொடை அமைந்திருப்பதுடன் அதன் அருகாமையிலேயே பிரதேச செயலகமும் அமைந்துள்ளது. இப்பாதையானது பிரதேச செயலாளர் பெரும்பகுதியின் தெற்கு எல்லையில் காணப்படும் களுகங்கைக்கு சமாந்தரமாக கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அமைந்துள்ளது.

இடங்கொடை நகரிலிருந்து வடக்கு திசையில் செல்லும் ஹிந்துரங்லை ஊடாக எஹெலியகொடை வரையான “பீ ” தர பதையானது 14 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதோடு இடங்கொடையிலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹிந்துரங்லை கிராம உத்தியோகத்தர் பிரிவின் எல்லையில் எமது  பிரதேச செயலாளர் பெரும்பகுதியானது  நிறைவுபெறுகிறது.கொழும்பு – இரத்தினபுரி “ஏ-3” பாதையில் வருகைத்தருவோருக்கு எஹெலியகொடையிலிருந்து 14 கிலோ மீற்றர் தூரத்தில்  இடங்கொடை  நகரை அடையக் கூடியதாக இருக்கும்.

அது தவிர ஹெரணியாவை பாலத்தைத் தாண்டி அயகமை நகரிற்கு செல்லும் பாதையின் தென் திசையில் அயகமையினூடாக கலவாணை நகரை அடையக் கூடியதாக இருக்கும்.

கொழும்பு – இரத்தினபுரி பாதையில் பதுவத்தை சந்தியிலிருந்து 13 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள குருகம்மோதரை வரையான “சீ” தர பாதையின் வடதிசையிலிருந்தும் , குருவிட நகர் மற்றும் கந்தன்கொடையிலிருந்து  பாணதுறை – இரத்தினபுரி பாதையின் கொரகஹெல சந்தி வரையான  “சீ” தர பாதையின் கிழக்கு திசையிலிருந்தும் எமது பிரதேச செயலகத்திற்கு வருகை தரக் கூடியதாக இருக்கும்.

களுகங்கையினூடாக மேற்கு தொடம்பை பிரிவின் தென் திசையில் அமைந்துள்ள எலபாத்தை பிரதேச செயலகத்தின் தம்புளுவனை, கஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குரிய வெலமிடிமுள்ள படகேறும் இடமும், எபிடவலை பிரிவின் தென் திசையில் அமைந்துள்ள கெ​டேபொல படகேறும் இடமும், எல்லகாவை பிரிவின் தென் திசையில் அமைந்துள்ள அயகமை பிரதேச செயலகத்திற்கு உரித்துடைய கெ​டேபொல பாலம் மற்றும் தும்பரை   படகேறும் இடமும் இப்பிரதேச செயலகத்திற்கு பிரவேசிக்கக் கூடிய முக்கிய நுழைவாயில்களாகும்

 

இடம் சார்ந்த தகவல்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆம் இடத்திலுள்ள எமது  பிரதேச செயலாளர் பெரும்பகுதியின் அளவு 7808.2 ஹெக்ரெயர் ஆகும்.

வடக்கில் எஹெலியகொடை பிரதேச செயலகப் பெரும்பகுதி மற்றும் குருவிட பிரதேச செயலாளர் பெரும்பகுதியும்,தெற்கில் அயகமை மற்றும் எலபாத்தை  பிரதேச செயலகப் பெரும்பகுதியும், கிழக்கில் இரத்தினபுரி பிரதேச செயலகப் பெரும்பகுதியும்,மேற்கில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய  பிரதேச செயலகப் பெரும்பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

இப்பிரதேச செயலகப் பெரும்பகுதியில் உள்ள 17  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 35 கிராமங்கள் காணப்படுகின்றன. அங்கு வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 8470 ஆக இருப்பதோடு மொத்த சனத்தொகை 32224 ஆக காணப்படுகின்றது.

 si

வரலாறு

எல்லே தேவாலயத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கிய கபுராளைமார்களின் பரம்ரையே எல்லகாவை கிராம உத்தியோகத்தர் பிரிவின் முதல் வதிவாளர்களாக கருதப்படுகின்றனர்.

யடிபவ்வை  கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிழக்கு திசையில் கொதாகல மலைத்தொடர்அமைந்துள்ளது. அதன் கீழ் அமைந்திருப்பதாலேயே அக்கிராமத்திற்கு யடிபவ்வை என பெயரிடப்பட்டுள்ளது. அவ்விடத்தின்  முதல் பரம்ரையினராக “அமரசிங்ஹ ஆரச்சியினரின் பரம்பரை” மற்றும் “அதுகோறளையினரின் பரம்பரை” என்பவற்றைக் குறிப்பிடலாம். அங்கு பிற்காலத்தில் “பதிர ஆரச்சி” என மூன்றாவதாக  ஒரு பரம்ரையும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

மே தற்காலத்தில் “முணசிங்ஹபுர” என அழைக்கப்படுகிறது. முனிஹின்கந்த பரம்பரையின் வழி வந்த மக்கள் குழாமினரே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது கிரியெல்ல பழைய பொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் தொடங்கும் ரஜ மாவத்தையின் அமைவிடமானது “ஹாந்துகந்தை” கிராம உத்தியோகத்தர் பிரிவின் “கொடிதுவக்குகந்தை” எனும் கிராமத்தினூடாக அமைந்திருப்பதோடு இராஜசிங்க மன்னன் அப்பாதையில் பயணம் செய்ததாகவும், அப்பாதையின் இருபுறமும் மரங்கள் நாட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன் காணப்பட்ட மன்னராட்சி காலத்தில் யுத்தங்களுக்கு கொடிகளையும், துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு முதலாவதாக சென்றோர் இக்கிராமவாசிகள் எனவும் அவர்களுக்காக  “கொடிதுவக்குகந்தை” எனும் பெயரில் கிராமப் பகுதியொன்று ஒதுக்கப்பட்டதாகவும் நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கபரலகந்தை” மேலிருந்து அக்கல்லின் மீது ஒரு நீர்வீழ்ச்சி விழுகிறது. முற்காலத்தில் அந்நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரானது பால் நிறமாக காட்சியளித்தமையால் “கிரியெல்ல” எனும் பெயர் உருவாகியுள்ளது.

அகுரணை கிராம  உத்தியோகத்தர் பிரிவானது அகுரணை, பஹலகந்தை எனும் இருப் பகுதிகளை கொண்டுள்ளது.  அகுரணை வயல்வெளிகளை தொடர்புபடுத்தி அகுரணை எனும் பெயரில் “அகுரணை” கிராமம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு ஒப்பீட்டளவில்  கீழாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் எனும் பொருள்தரக் கூடிய  பஹலகந்தை கிராமம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. இப்பிரதேசத்தில் புத்தாண்டு விழாவிற்கு முன் புத்தரிசி திருவிழா எனும் பெயரில் நெல் அறுக்கப்பட்டு இறைவழிப்பாடு மேற்கொள்ளும் முறையானது இன்றளவிலும் இடம்பெறுகின்றது. இதற்காக அகுரணை வயல்வெளிகளில் ஒரு குறித்த இடத்தை தேர்வு செய்தும் உள்ளனர். இக்கிராம மக்களில் பெரும்பாலானோர் ஒற்றுமையாக இணைந்து இப்பூஜைகளை செய்து வருகின்றனர்.

“எல்லாவலை பஹலகமை” கிராம  உத்தியோகத்தர் பிரிவில் வரலாற்றுக்கு முந்தைய யுகத்திலும் மனிதர்கள் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் சக்கரவர்த்தி எல்லாவலை மேதானந்த தேரரின் ஆய்வுகளின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. முற்காலத்தில் குகைகளில் வாழ்ந்ததாக கூறப்படும் பரம்பரையை சார்ந்த மக்கள் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். எல்லாவலை கல்லேனகே எனும் தலைமுறையினர் அப்பரம்பரையை சார்ந்தோராவர். கண்டி இராஜியத்தில் சீதாவக இராசதானியின் போது அரச வேட்டை கிராமமாக இருந்த இப்பிரதேசத்தின் ஒரு முனையில் அமைந்துள்ள காலன் விகாரை மற்றும் "எல்லாவல" போன்றவையும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. சீதாவக இராசதானியில் மூன்று முறை முடிச்சூடிய ராஜசூரிய இளவரசர் இப்பகுதியில் வாழ்ந்ததாக வணக்கத்திற்குரிய கிரியெல்ல ஞானவிமல தேரரின் “சப்ரகமுவை ஆவணங்கள்” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணன்நெல்லையில் கிடைத்த இரத்தினக்கற்களை பிரித்தானியாவின் மகுடத்திற்காக எடுத்துச் சென்றதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது

சீதாவக்கை மன்னர் இப்பிரதேசத்தில் சுற்றித் திரிந்தபோது தங்குவதற்காக தெஹெரகொடையில் அமைந்துள்ள கெந்தலந்த எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்விடத்தில் ஒரு பழைய மடத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றது. இங்கு 'மெணிக் பத்தன' என்ற பெயரில் பள்ளம் ஒன்று இருப்பதோடு, அங்கு கிடைத்த சிவப்பு இரத்தினக் கற்களால் அம்மிக்கல்லொன்றும் செதுக்கப்பட்டுள்ளது. அங்கு மடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்ததால் தற்போது பயன்படுத்தப்படும் தெஹ​ரகொடை என்ற பெயர் கடந்த காலத்தில் 'வெஹெரகொடை' என்று அழைக்கப்பட்டது.

'தொடம்பை' புராதன மன்னர்களுக்கு சேவைப் புரிந்த  கிராமம் ஆகும். மன்னர்களுக்கு சேவை செய்தமையால் 'தொடம்பை' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஸ்ரீஂ விக்ரம இராஜசிங்ஹ மன்னருக்கு அனைத்து ஜோதிடப் பணிகளையும் மேற்கொண்ட 'தொடம்பை கணிதமேதை குருநாஞ்சே' இக்கிராமத்தில் வசித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவருடைய சந்ததியினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். பாரம்பரிய சடங்குகளாக கடவுள் நம்பிக்கை மற்றும் பேய், பிசாசுகள் மீதான நம்பிக்கை இன்றும் அம்மக்களிடையே காணப்படுகிறது மற்றும் மாந்தரீகம் செய்தல், பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.

'ஹொலிபிட்டிய' பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே ஸ்ரீ சுமன சமன் தேவாலயத்திற்கு சேவைகளை மேறகொண்டவர்கள் ஆவர். இங்கு காணப்படும் பெரும்பாலான கிராமங்கள் இன்றும் இவ்வாலயத்திற்க்குச் சொந்தமானவை ஆகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்டுதோறும் இடம்பெறும் ஸ்ரீ சுமன சமன் தேவாலய ஊர்வலத்திற்குரிய பணிளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய சடங்கு முறைகளுக்கமைவாக மரணம் அல்லது விழாக்கள் நடாத்தப்படும்போது சுற்றியுள்ள மக்கள் வெற்றிலை, பாக்குடன் வருகைத் தருவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

Kabaragala WaterFall 
கபரகலை நீர்வீழ்ச்சி (கிரியெல்ல) 
'கிரியெல்ல' பிரிவின் பாதுகாப்பு வலயமாக பெரிய களிரொன்றின் தந்தம் போன்று அமைந்துள்ள 'கபரகல கந்தை'யின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 'கிரியெல்ல' பிரதேசத்தில் பாயும் இந்நீர்வீழ்ச்சி ஆனது கிரியெல்லயின் பெருமையை உறுதிப்படுத்துகிறது. இந்நீர்வீழ்ச்சியிலிருந்து பாயும் நீரானது பால் நிறமாகக் காட்சியளிப்பதே 'கிரியெல்ல' என்ற பெயர் வரக் காரணமாகும்.
 

 

EllaDewalaya 

எல்லே தேவாலயம்

சப்ரகமுவை மாகாணத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் 'எல்லே தேவாலயம்' புகழ்பெற்றதாக திகழ்கிறது. பெணிகலை நீர்வீழ்ச்சிக்கு அருகில் இத்தேவாலயம் அமைந்திருப்பதால், 'எல்லே தேவாலயம்' என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி மக்களினால் இவ்வாலயத்தின் பூஜைகள் நடாத்தப்படுவதுடன், 1521ஆம் ஆண்டு இவ்வாலயமானது 'சீதாவக்கை' மற்றும் ‘இறைகமை' இராஜ்ஜியங்களுக்கு இடையிலான எல்லையாக அமைந்திருக்கின்றது.
 

nadun 

நெந்துன் இரஜ மஹா விகாரை 

சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள இது பிரதான மல்வத்து மகா விகாரை பிரிவைச் சேர்ந்த ஐந்து சியாமிய மகா விகாரைகளில் ஒன்றாக 'கிரியெல்லே நெந்துன் இரஜ மஹா விகாரை'  பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையை இறுதியாக ஆட்சி செய்த ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வேண்டுகோளின்படி முத்து எழுத்துக்களில் தர்ம நூல்களை எழுதியதற்காக மகிழ்ச்சியடைந்து அந்நூலை இயற்றிய நன்கு கற்றறிந்த, மேன்மைக்குரிய தர்மத் துறவியான  கரந்தன தேவரக்கித மஹா ஸ்தாவீர தேரரின் பரிபோஜனத்திற்குண்டான “மியனதளு” என்ற கீரை வகையினை பறிப்பதற்கு ஒருப் பகுதி நிலத்தினை வழங்கியுள்ளார். இது சுமார் 12000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட உபகாரமாக வழங்கப்பட்ட கிராமம் ஆகும். இந்தக் காணியை அண்மித்தே 'நெந்துன் இரஜ மஹா விகாரை' அமையப் பெற்றுள்ளது.
சிறிபா அடவியில் இருந்து பாயும் களுகங்கை ஆற்றின் இதமான அரவணைப்பை பெற்றதே கிரியெல்ல கிராமப் பகுதி ஆகும். களுகங்கையில் நிரம்பி வழியும் நீரால் மூழ்கும் தாழ்நிலப் பகுதியாளும், அனைத்துப் பக்கங்களிலும் வானினைத் தொடுமளவு உயர்ந்துள்ள மலைகளாலும் இவ்விகாரையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நெந்துன் எனும் மரப்பலகையினைக் கொண்டு இவ்விகாரை நிர்மாணிக்கப்பட்டிருப்பது தனித்துவமானதாகும். இவ்விகாரையிலேயே இலங்கையின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான தந்தச்​ சோடி காணப்படுகிறது. இத்தந்தச் சோடியின் உயரம் சுமார் 7 அடி 7 அங்குலம் ஆகும்.
 

 

na  இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொடையில் இருந்து 6 மைல் தொலைவில் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள இப்புனிதத் தலமானது ஆழமான வரலாற்றைக் கொண்டுள்ளது.சீதாவக்கை முதலாம் இராஜசிங்க மன்னன் காலத்தில் இருந்தே கிரியெல்ல நெந்துன் இரஜ மஹா விகாரை புகழ்பெற்றதாக திகழ்ந்துள்ளது. கி.பி.1581 முதல் 1593 வரையான காலப்பகுதியில் முதலாம் இராஜசிங்க மன்னன் இந்து மதத்திற்கு மாறியமையால் இந்தக் தலமும் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

nad  இக்காலத்தில் வாழ்ந்த உடகரந்தன தேவரக்கித தேரரின் கையெழுத்து கலையால் கவரப்பட்ட முதலாம் இராஜசிங்க மன்னன் தனக்கு ஒரு பௌத்த மதம் சார்பான நூலினை இயற்றித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வேண்டுகோளுக்கு இணங்க, அந்நூலை இயற்றி மன்னருக்குப் பரிசளித்தமையால் மகிழ்ச்சியுற்ற முதலாம் இராஜசிங்க மன்னன் தேவரக்கிய தேரருக்கு 8305 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கிராமத்தை அன்பளிப்பாக வழங்கினார். இவ்வரசக் கட்டளையானது சப்ரகமுவையில் கண்டி மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட அபயகோன் முதியன்சே என்பவரால் ஆவணமாக எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, இச்சொத்துக்குரிய உரிமை நெந்துன் இரஜ மஹா விகாரை வாழ் பிக்குகளையே சாரும். 

 

nadu 
இவ்விகாரை மூன்று கலசங்களைக் கொண்டதாகும். இவற்றில் ஒன்று தூண்களால் ஆக்கப்பட்டதாகும். இவ்விகாரையானது நெந்துன் எனும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது. நெந்துன் எனும் மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்றும் காணப்படுகிறது. இது நெந்துன் எனும் மரத்தால் செய்யப்பட்ட இருக்கையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சீதாவக்கை சகாப்தத்தில் பெருமாள்-விஷ்ணு ஆகியோரின் தெய்வகடாட்சம் கிட்டியுள்ளது. இங்கு காணப்படும் ஆசனமானது கருடனின் உருவத்தினால் ஆக்கப்பட்டுள்ளது. 

 

 FB IMG 16210881342484192
துட்டகைமுனு மன்னரின் கன்னி யானையின் தந்தச் சோடி இவ்விகாரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பிற்காலத்தில் முதலாம் இராஜசிங்க மன்னன் இவ்விகாரையினைப் பராமரித்து வந்ததாகவும் எந்தவொருத்  தொல்லையும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

 

சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

b dumy 
திரு.எம்.கே.ஜீ.கே.நெம்மவத்த
1996.08.01இருந்து 1998.10.07 வரை

 

b dumy 
திரு.கே.கே.குணபால
1998.10.28 இருந்து 2006.02.09வரை

 

b dumy 

திரு.கே.வீ. பெரேரா

2006.02.15 இருந்து  2006.04.18 வரை

 

b dumy 
திரு.எம்.டப்ள்யூ. குலதிலக
2006.04.19 இருந்து 2012.05.08 வரை 

 

Mrs.PradeepikaIllukkumbura 01 
திருமதி.ஐ.ஆர்.எம்.பீ.டீ.இழுக்கும்புர
 2012.05.10  இருந்து 2018.08.24 வரை

 

 Mr.JLCKJayasinghe 01
திரு.ஜே.எல்.சீ.கீர்த்தி ஜயசிங்க
2012.08.29 இருந்து 2021.01.15 வரை

 

HSPradeep
திரு. எச்.எஸ். பிரதீப்(பதில் கடமை புரிபவர்)
2021.01.27 இருந்து 2021.12.03 வரை

 

 Mr.SMDCSamarasekara 01
திரு. எச்.எம்.டீ.சீ. சமரசேகர
2012.07.13 இருந்து 2022.09.30 வரை​ 

 

BMBMABatugedra 1 
திரு. பீ.எம்.டீ.சீ. படுகெதர
2022.10.10 இருந்து 

 

பிரதேச செயலக எல்லைகள்/ கிராமப் பிரிவுகளின் எல்லைகள் மற்றும் பிரதேச செயலக வரைப்படம்

கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவு

வடக்கில் எஹெலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் எலபாத மற்றும் அயகமை பிரதேச செயலாளர் பிரிவுளும், கிழக்கில் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் மேற்கில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

si

 

 

 

 

 

 

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top